முதல்முறையாக அஜித் படம் செய்த சாதனை.. வசூலை குவிக்கும் 'துணிவு'

  • IndiaGlitz, [Monday,January 16 2023]

அஜித் நடித்த ‘துணிவு’திரைப்படம் அறுவடை நாள் விருந்தாக கடந்த 11ஆம் தேதி வெளியான நிலையில் வசூலிலும் அறுவடை செய்து வரும் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.

அஜித் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவான திரைப்படம் ‘துணிவு’. அஜித் மஞ்சு வாரியார் ஆகியோர்களின் அட்டகாசமான ஆக்சன் காட்சிகளில் உருவான இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்தோம்.

தமிழகம் மட்டுமின்றி கேரளா ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும், வட இந்திய மாநிலங்களிலும் இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி லைகா நிறுவனம் இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்றதை அடுத்து பிரமாண்டமாக புரமோஷன் செய்தது. இதன் பயனாக ‘துணிவு’ படம் இதுவரை இல்லாத அளவில் வெளிநாடுகளிலும் வசூலை வாரி குவித்து வருகிறது.

அந்த வகையில் ‘துணிவு’ திரைப்படம் வட அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. அஜித் நடித்த படம் முதல் முறையாக ஒரு மில்லியன் டாலர் என்ற வசூலை எட்டி சாதனை படைத்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் மற்றும் இந்தியாவில் மட்டுமே வசூலை வாரி குவித்த அஜித்தின் படம் முதல் முறையாக வெளிநாடுகளிலும் பெருவாரியான வசூலை பெற்று வருவதால் இனிவரும் அஜித்தின் படங்களின் வெளிநாட்டு உரிமை மிகப்பெரிய விலைக்கு போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

செல்வராகவன் அடுத்த படத்தின் சென்சார் தகவல். ரிலீஸ் எப்போது?

தமிழ் திரை உலகின் திறமையான இயக்குனராக மட்டுமின்றி சில படங்களில் நடித்தும் வரும் செல்வராகவன் நடித்த அடுத்த திரைப்படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

'சூர்யா 42' படத்தின் சூப்பர் அப்டேட்.. ஃபர்ஸ்ட்லுக் எப்போது?

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

அரசியலில் குதிக்கின்றாரா 'துணிவு' மஞ்சுவாரியர்? அவரே அளித்த பதில்!

நடிகை மஞ்சு வாரியார் கேரளா அரசியலில் குதிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த தகவல்களுக்கு அவரை விளக்கம் அளித்துள்ளார். 

'ஜப்பான்' படத்தின் செம போஸ்டர்.. வித்தியாசமான தோற்றத்தில் கார்த்தி!

 கார்த்தி நடித்த 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'சர்தார்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் 'ஜப்பான்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவியின் 29வது படம்.. மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

 தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது