முழுக்க முழுக்க பொய்.. யாரும் இதை நம்ப வேண்டாம்: போனிகபூர் டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் அந்த படத்தை வெளியிடும் பரபரப்பில் உள்ளார் என்பதும் இந்த படத்திற்கான இறுதிகட்ட புரமோஷன் பணிகளில் அவர் தீவிரமாக உள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் திடீரென சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ’லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை போனிகபூர் வாங்கி இருப்பதாகவும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கேரக்டரில் வருண் தவான் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தை தமிழில் இயக்கிய பிரதீப் ரங்கநாதன் ஹிந்தியிலும் இயக்குவார் என்றும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் சற்று முன்னர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ’லவ் டுடே’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் பொய்யான தகவல் என்றும் இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை குறித்த வியாபாரம் இன்னும் நடைபெறவில்லை என தெரிகிறது.
Please note that I have NOT acquired the remake rights of Love Today. All such reports on social media are baseless and fake.
— Boney Kapoor (@BoneyKapoor) January 2, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments