5 நிமிட காட்சியை எடிட் செய்ய 25 நாள் ஆனது: 'துணிவு' எடிட்டர் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
‘துணிவு’ திரைப்படத்தில் இடம் பெற்ற ஐந்து நிமிட காட்சியை எடிட் செய்வதற்கு 25 நாட்கள் தனக்கு ஆனது என படத்தின் எடிட்டர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது என்பதும் இந்த படம் இரண்டே நாட்களில் 65 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தொடர் விடுமுறை வருவதால் முதல் வாரத்தில் இந்த படம் 150 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘துணிவு’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை மஞ்சு வாரியார் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தில் இடம்பெறும் மோட்டார் படகு சேசிங் காட்சியில் அஜித் டூப் இல்லாமல் நடித்திருந்தார் என்றும் அதுமட்டுமின்றி எங்களுக்கும் அவர் மோட்டார் படகை ஓட்டுவதற்கு சொல்லிக் கொடுத்தார் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் படத்தில் ஐந்து நிமிடங்களில் வரும் இந்த மோட்டார் படகு சேசிங் காட்சியை எடிட் செய்ய மட்டும் 20 முதல் 25 நாட்கள் ஆனது என இந்த படத்தின் எடிட்டர் விஜய் வேலு குட்டி தெரிவித்துள்ளார். இயக்குனர் எச் வினோத் திருப்தி அடையும் வரை தொடர்ந்து மாற்றி மாற்றி எடிட் செய்ததாகவும் கடைசியில் 25 நாட்கள் கழித்து தான் அவருக்கு திருப்தி ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐந்து நிமிட காட்சியை எடிட் செய்ய 25 நாட்கள் ஆனது என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments