'தளபதி 67' குறித்து 'துணிவு' இயக்குனர் என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தளபதி 67’ திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் ’துணிவு’ படத்தை இயக்கிய எச் வினோத் 'தளபதி 67’ படம் குறித்து சொன்ன கருத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது:

பொதுவாக பான் இந்தியா திரைப்படம் என்றால் அதை முதல் நாளில் இருந்தே முடிவு செய்து இந்தியா முழுவதும் சந்தைப்படுத்த தொடங்கவேண்டும். அஜித் மற்றும் விஜய் படங்கள் இதுவரை தமிழ் மார்க்கெட்டை குறிவைத்து உருவாக்கப்படுகின்றன. ஆனால் தற்போது அவர்களின் படங்கள் மற்ற மொழிகளிலும் நன்றாக ஓடுவதால் கூடுதல் போனசாக அவர்களின் திரைப்படங்கள் இனிமேல் பான் இந்திய திரைப்படமாக தயாரிக்க வாய்ப்பு இருக்கிறது.

பாகுபலி, கேஜிஎப் போன்ற படங்கள் பான் இந்திய படமாக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் அஜித் விஜய் படங்களும் பான் இந்திய திரைப்படமாக வெற்றிபெறும். குறிப்பாக விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கும்

'தளபதி 67’ படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக திட்டமிடுவதாக நான் நினைக்கின்றேன். எனவே அதற்கேற்றவாறு கதை, நட்சத்திரங்கள் தேர்வு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவை திட்டமிடப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து 'தளபதி 67’ திரைப்படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாக இருப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.