கர்ப்பமாக இருக்கும்போது தலைகீழாக யோகா: 'துணிவு' நடிகர் மனைவியின் அதிர்ச்சி வீடியோ

  • IndiaGlitz, [Sunday,January 08 2023]

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகரின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில்தான் அவர் தலைகீழாக யோகா செய்து இருக்கும் வீடியோவை வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகர் ஜான் கொகைன் என்பதும் அவர் தற்போது அஜீத் நடித்துள்ள ‘துணிவு’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஜான் கொகைன் மனைவி பூஜா ராமச்சந்திரன் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலைகீழாக யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்ப்பமாக இருக்கும் இந்த நிலையில் இது போன்ற ரிஸ்க்கான யோகா தேவையா? என்று அவருக்கு பலர் அறிவுரை கூறி வருகின்றனர். இருப்பினும் பூஜா ராமச்சந்திரன் தகுந்த பயிற்சியாளரை அருகில் வைத்துக்கொண்டு தான் இதுபோன்ற யோகாவை அவர் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

More News

பாஜகவில் இருந்து வெளியேறினாரா பிரபல இயக்குனர்: அவரே அளித்த விளக்கம்!

நடிகை காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து விலகிய நிலையில் பிரபல பெண் இயக்குனர் ஒருவரும் பாஜகவிலிருந்து விலகி உள்ளதாக ஒரு சில இணையதளங்களில் செய்தி

'இருள் ஆளப்போகிறது.. 'டிமாண்டி காலனி 2' வீடியோ: யார் யார் நடிச்சிருக்காங்க?

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவான 'டிமான்டி காலனி' என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் டாப் 50 பட்டியலில் இடம்பெற்ற தனுஷ்.. வேற யார் யாரெல்லாம் இருக்காங்க!

போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள டாப் 50 நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர் தனுஷ் இடம்பெற்றிருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

சின்ன பிள்ளை வேலையெல்லாம் விட்டு விட்டு பிழைக்கிற வழிய பாருங்க: விமல் வெளியிட்ட வீடியோ

நடிகர் விமல் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் கிளம்பிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் விமல்,

வசூல் வேட்டையை அடுத்து விருது வேட்டை: 6 பிரிவுகளில் 'பொன்னியின் செல்வன்'

 மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது