close
Choose your channels

கர்ப்பமான நேரத்தில் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ்: 'துணிவு' நடிகர் மனைவியின் பதிவு வைரல்!

Friday, January 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘துணிவு’ படத்தில் நடித்த நடிகரின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் தனது காதல் கணவருடன் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

அஜீத்தின் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தில் யுவர்ஸ் பேங்க் பேங்க் உரிமையாளராக ஜான் கொகைன் நடித்திருப்பார் என்பதும் அவரது நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஜான் கொகைன் மனைவி பூஜா ராமச்சந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்ததை அடுத்து அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது.

இந்த நிலையில் அவ்வப்போது கர்ப்பமான போட்டோஷூட் புகைப்படங்களை பூஜா ராமச்சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் தாய்லாந்தில் உள்ள நீச்சல் குளத்தில் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்து உள்ளார்.

நீச்சல் குளத்தில் தனது காதல் கணவருக்கு முத்தம் கொடுப்பது, கணவரின் இடுப்பில் உட்கார்ந்து போஸ் கொடுக்கும் புகைப்படம் உள்பட பல புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ’சூரியன் மறையும் நேரத்தில் எனது இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறேன்’ என்று அவர் தனது வயிற்றில் உள்ள குழந்தையையும் கணவரையும் குறிப்பிட்டு கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment