'துணிவு' பட நடிகரின் மனைவிக்கு சீமந்தம்.. வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,February 09 2023]

அஜித் நடித்த 'துணிவு’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகரின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருடைய சீமந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

அஜீத் நடித்த 'துணிவு’ திரைப்படத்தில் வங்கியின் உரிமையாளராக நடித்தவர் ஜான் கொகைன். இவர் ஏற்கனவே பா ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து உள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் ஜான் கொகைன் மனைவி பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படங்களை அவர் பதிவு செய்திருந்தார். குறிப்பாக சமீபத்தில் ஜான் கொகைன் மற்றும் பூஜா ராமச்சந்திரன் ஆகிய இருவரும் பிகினி உடையில் பீச்சில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகின.

இந்த நிலையில் பூஜா ராமச்சந்திரன் சீமந்தம் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இது குறித்த புகைப்படங்களை ஜான் கொகைன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.