எனக்கு அஜித் தான் ஆசிரியர்.. ஆசிரியர் தின விழா வாழ்த்து கூறிய பிரபல நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
எனக்கு அஜித் தான் ஆசிரியர் என ஆசிரியர் தினமான இன்று பிரபல நடிகர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம் என்பதும் அந்த வகையில் இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை தெரிந்ததே. பல திரையுலக பிரபலங்கள் தங்களது ஆசிரியர்களை நினைவு கூர்ந்து பதிவுகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் அஜீத் நடித்த ’துணிவு’, பா. ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ உள்பட ஒரு சில படங்களில் நடித்த பிரபல நடிகர் ஜான் கொக்கென் தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித் தான் தனது ஆசிரியர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு பின்வருமாறு:
கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதற்காகவே நமக்கு ஆசிரியர்களை கொடுத்துள்ளார். நாம் வாழ்வில் உயரவும் நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். எனக்கு அதுபோல அஜித்குமார் தான் ஆசிரியர். எனக்கு மட்டுமின்றி கோடிக்கணக்கானவர்களுக்கு வழிகாட்டியாக அவர் இருந்து வருவதற்கு நன்றி.
என் வாழ்வில் வந்ததற்கும், நான் நினைத்து கூட பார்க்க முடியாத விஷயங்களை செய்ய என்னை ஊக்குவித்ததற்கும் அஜித் அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ஜான் கொக்கன் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். ஜான் கொக்கனின் இந்த பதிவை அஜித் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்
God couldn’t be everywhere so he gave us teachers, someone to guide us in the right direction so that we may grow in life. Thank you Ajith Kumar Sir for being that guiding light not just for me but for millions. Thank you for coming into my life and making my life better. pic.twitter.com/V3c89whht5
— John Kokken (@highonkokken) September 5, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments