close
Choose your channels

சினிமாவில் வில்லனாக இருக்கலாம்.. ஆனால் அவருக்கு நான் தான் ஹீரோ: ஜான் கொக்கன் உருக்கமான பதிவு..!

Tuesday, May 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமாவில் வேண்டுமானால் நான் வில்லனாக இருக்கலாம், ஆனால் என் மகனுக்கு நான் தான் ஹீரோ என ஜான் கொக்கன் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரை உலகின் வில்லன் நடிகர்களில் ஒருவர் ஜான் கொக்கன் என்பதும் ’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் வேம்புலி என்ற கேரக்டரில் சூப்பராக நடித்திருந்த ஜான் கொக்கன், அஜித்தின் ’துணிவு’ படத்தில் வங்கி அதிபராக நடித்து அஜித்துக்கே வில்லனாக நடித்து கலக்கினார். மேலும் தற்போது தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட சில படங்களில் அவர் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் எஸ்.எஸ் மியூசிக் சேனலில் தொகுப்பாளினி பூஜா ராமச்சந்திரனை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஜான் கொக்கனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தைக்கு கியான் கொக்கன் என பெயரிட்டனர்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையை கையில் தூக்கி வைத்து இருக்கும் க்யூட்டான புகைப்படத்தை பதிவு செய்து அதில் கேப்ஷனாக ’நான் சினிமாவில் வேண்டுமானால் வில்லனாக இருக்கலாம், ஆனால் என் மகனுக்கு நான் தான் ஹீரோ’ என பதிவு செய்துள்ளார் இந்த பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment