கர்ப்பிணி மனைவிக்கு லிப்கிஸ் முத்தம்.. 'துணிவு' பட நடிகரின் பீச் ரொமான்ஸ் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,April 11 2023]

அஜித்தின் ‘துணிவு’ படத்தில் நடித்த நடிகர் தனது கர்ப்பிணி மனைவிக்கு பீச்சில் ரொமான்ஸ் லிப் முத்தம் கொடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தில் வங்கி உரிமையாளராக நடித்திருந்தவர் ஜான் கோகைன் என்பதும் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்ததே. ஏற்கனவே இவர் 'சார்பாட்டா பரம்பரை'’ என்ற படத்தில் வேம்புலி என்ற கேரக்டரில் நடித்து பிரபலம் ஆகியிருந்தார்.

இந்த நிலையில் ஜான் கோகைன், பூஜா ராமச்சந்திரன் என்ற தொலைக்காட்சி தொகுப்பாளினியை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் பூஜா கர்ப்பமானார். கர்ப்பமானதில் இருந்து அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் பிகினி உடையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது பீச்சில் ஜான் கோகைன் தனது மனைவி பூஜா ராமச்சந்திரனுடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள், லிப் கிஸ் கொடுத்த புகைப்படங்கள் பூஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.