அனிருத்தின் 'புதுசாட்டம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,April 04 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'தலைவர் 167' திரைப்படம், கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' உள்பட பிரபலங்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வரும் படங்களில் ஒன்று 'தும்பா'.

ஹரிஷ் ராம் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'புதுசாட்டம்' என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனிருத் ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.

தர்ஷன், கீர்த்தி பாண்டியன், கலக்கு போவுது யாரு புகழ் தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகி வருகிறது. அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர். நரேன் எலன் ஒளிப்பதிவில், கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.
 

More News

'தல' தோனி ரசிகையாக மாறிய பாட்டி: மும்பையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பைக்கு எதிராக விளையாடிய சென்னை அணி தோல்வி அடைந்தாலும் சென்னை அணியின் கேப்டன் தல தோனி, மும்பைவாசிகளின் இதயத்தை ஒரே ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தால் வென்றுவிட்டார்.

குழந்தைக்கு 'அஜித்' என்று பெயர் வைத்த டிடிவி தினகரன்

தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசியல் தலைவர்கள் செல்லும்போது தொண்டர்கள் சிலர் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்வது வழக்கம்.

ராகுல்காந்தியை எதிர்த்து சரிதா நாயர்: பரபரப்பாகும் வயநாடு தொகுதி

அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி காலமானார்.

காலத்தால் அழியாத பாடல்களான கொக்கரக் கொக்கரக்கோ சேவலே, துணிந்தால் துன்பமில்லை, என்னருமை காதலிக்கு வெண்ணிலவே, வாடிக்கை மறந்ததும் ஏனோ, .சின்னப்பயலே...

சிவாஜி கணேசனுக்கு மரியாதை செய்த அமிதாப்பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ்ப்படமான 'உயர்ந்த மனிதன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே