முதலமைச்சர் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தியின் சர்ச்சை விமர்சனம்: அதிமுகவினர் கொந்தளிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல எழுத்தாளர், நடிகர், அரசியல் விமர்சகர் சோ அவர்களின் மறைவிற்கு பின்னர் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றி வரும் ஆடிட்டர் குருமூர்த்தி, முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஆண்மை இல்லாத தலைவர்கள் என்று தனது டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய விமர்சனத்திற்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
'ஆண்மை இல்லாத குருமூர்த்தி, ஆண்மையை பற்றி பேசவே கூடாது. அவர் படித்த முட்டாள் போல பேசியுள்ளார். இதைவிட நூறு மடங்கு தடித்த வார்த்தைகள் எங்களுக்கும் தெரியும். ஆனால் எங்கள் தலைவர்கள் எங்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் நாகரீகத்தை கடைபிடித்து வருகின்றார்கள். அவர்கள் கொந்தளித்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே இதுபோன்ற தடித்த வார்த்தைகளை பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி தனது கருத்தை திரும்ப பெற்றுக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்குரிய பலனை அவர் அனுபவிப்பார். மேலும் அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் .
மேலும் இதுகுறித்து அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தமது டுவிட்டரில் கூறியபோது, 'வார்த்தைகளை கவனமாக பதிவிடுங்கள்.. மற்றவர்களை இழிவாக விமர்சிக்கும் நீங்கள் என்னதான் சாதித்துவிட்டீர்கள்? நோட்டாவை விட பாஜக ஏன் குறைவான வாக்குகள் பெற்றது என்பதை சொல்ல முடியுமா? என கொந்தளித்து டுவீட்டை பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments