முதலமைச்சர் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தியின் சர்ச்சை விமர்சனம்: அதிமுகவினர் கொந்தளிப்பு

  • IndiaGlitz, [Tuesday,December 26 2017]

பிரபல எழுத்தாளர், நடிகர், அரசியல் விமர்சகர்  சோ அவர்களின் மறைவிற்கு பின்னர் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றி வரும் ஆடிட்டர் குருமூர்த்தி, முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஆண்மை இல்லாத தலைவர்கள் என்று தனது டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய விமர்சனத்திற்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

'ஆண்மை இல்லாத குருமூர்த்தி, ஆண்மையை பற்றி பேசவே கூடாது. அவர் படித்த முட்டாள் போல பேசியுள்ளார். இதைவிட நூறு மடங்கு தடித்த வார்த்தைகள் எங்களுக்கும் தெரியும். ஆனால் எங்கள் தலைவர்கள் எங்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் நாகரீகத்தை கடைபிடித்து வருகின்றார்கள். அவர்கள் கொந்தளித்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே இதுபோன்ற தடித்த வார்த்தைகளை பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி தனது கருத்தை திரும்ப பெற்றுக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்குரிய பலனை அவர் அனுபவிப்பார். மேலும் அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் . 

மேலும் இதுகுறித்து அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தமது டுவிட்டரில் கூறியபோது, 'வார்த்தைகளை கவனமாக பதிவிடுங்கள்.. மற்றவர்களை இழிவாக விமர்சிக்கும் நீங்கள் என்னதான் சாதித்துவிட்டீர்கள்? நோட்டாவை விட பாஜக ஏன் குறைவான வாக்குகள் பெற்றது என்பதை சொல்ல முடியுமா? என கொந்தளித்து டுவீட்டை பதிவு செய்துள்ளார்.

More News

மக்கள் வேணுமா? காசு வேணுமா? அதிமுகவினர்களுக்கு நடிகர் செந்தில் கேள்வி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற டிடிவி தினகரன் அணிக்கு பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் என்ன சிறுபிள்ளை விளையாட்டா? ரஜினியெல்லாம் வரமுடியாது: நாஞ்சில் சம்பத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய ரசிகர்களின் சந்திப்பின்போது வரும் 31ஆம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவிருப்பதாக கூறியுள்ளார்.

புத்தாண்டுக்கு முன் 'தளபதி 62' படத்தின் அறிவிப்பு?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 62' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சூர்யாவாக மாறிய அல்லு அர்ஜூன்

சமீபத்தில் நடந்த படவிழா ஒன்றில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மீது கோபம் அடைந்ததாக பரபரப்பான செய்தி வெளியான நிலையில் மீண்டும் ஒருமுறை அவர் ரசிகர்களிடம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இரும்புத்திரை படத்தில் விஷால், சமந்தா கேரக்டர் அறிவிப்பு

விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது