'தக்லைஃப்' ரிலீஸ் எப்போது? முக்கிய அறிக்கையை வெளியிட்ட தயாரிப்பு குழுவினர்..!

  • IndiaGlitz, [Wednesday,May 08 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பது குறித்து அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு குழுவினர் இணைந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

’தக்லைஃப்’ படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூவிஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

’விக்ரம்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை அடுத்து கமல்ஹாசனின் ’தக்லைஃப்’ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மணிரத்னம் அவர்களால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய இயக்குனர் மற்றும் நடிகர் இணைந்துள்ள இந்த படத்தில் மற்ற பிரபல நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் கூடுதல் இணைப்பாக சிம்பு இணைந்துள்ளதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை ஆர் மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் அவர்களும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியையும் செய்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவ் பணிபுரிந்து வரும் நிலையில் இந்த படத்தின் மற்ற தொழில்நுட்ப பணிகளை வல்லுநர்கள் செய்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் டீசர், கமல்ஹாசனின் லுக் உட்பட அனைத்தும் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துக் கொள்வதோடு இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் தெரிவித்து கொள்கிறோம்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More News

இளையராஜாவை தொடர்ந்து யுவன்ஷங்கர் ராஜாவின் பயோபிக்.. ஒரு வரியில் கதை சொன்ன இயக்குனர்..!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமும் உருவாக இருப்பதாகவும்

தன்னுடைய படத்தை ரீரிலீஸ் செய்ய கோரிக்கை விடும் சோனியா அகர்வால்.. செல்வராகவன் மனது வைப்பாரா?

கடந்த சில மாதங்களாக ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆகி வரும் நிலையில் தன்னுடைய படத்தையும் செய்ய வேண்டும் என சோனியா அகர்வால் கோரிக்கை விடுத்துள்ளதை

விஜய்யின் 'கோட்' படத்தில்  பிரபல நடிகர் கேமியோவில் நடிக்கிறாரா? உண்மைதானா?

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம் நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு பிரபல

அடுப்பே பற்ற வைக்காமல் சூப்பர் டிஷ் செய்த ரம்யா கிருஷ்ணன்.. வேற லெவல் வீடியோ..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் அடுப்பே பற்றவைக்காமல் செய்த டிஷ் ஒன்றின் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பீச்சில் தோழிகளுடன் நயன்தாரா? வேறு யார் யார் இருக்காங்க பாருங்க..!

நடிகை நயன்தாரா பீச்சில் தனது கணவர் மற்றும் தோழிகளுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.