close
Choose your channels

'தக்லைஃப்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

Monday, May 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்த ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும், இடையில் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவரது காட்சிகள் இல்லாத படப்பிடிப்பு நடந்து வந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்ற போது அதில் கமல்ஹாசன், சிம்பு உள்பட பலர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டெல்லி படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தக்லைஃப்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நாளை முதல் தொடங்க இருப்பதாகவும் சென்னையில் 17 நாட்கள் படப்பிடிப்பு நடதத படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாளை முதல் தொடங்க இருக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன் உள்ளிட்ட சிலர் பங்கேற்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் உணர்ச்சிகரமான சில சென்டிமென்ட் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்திருப்பதாக கூறப்படும் நிலையில் சிம்பு இந்த படத்தில் இணைந்தவுடன் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படத்தின் பிசினஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment