சிம்பு என்ட்ரி ஆனவுடன் மிகப்பெரிய அளவில் வியாபாரமான 'தக்லைஃப்'.. எத்தனை கோடி தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,May 09 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சிம்பு இணைந்ததாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் இது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் ஆனது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு இணைந்ததை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது மட்டும் இன்றி வியாபாரமும் களைகட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கி விட்டதாக தெரிகிறது. முதல் கட்டமாக இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை சுமார் 60 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி உள்ளதாகவும் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய விலைக்கு விற்பனையான படங்களில் படத்தின் படமும் ஒன்று என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ‘தக்லைஃப்’ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை வாங்கவும் போட்டி அதிகமாக இருக்கிறது என்றும் அதன் விலையும் சாதனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

கமல்ஹாசன் மற்றும் சிம்பு முதல் முறையாக இணைவது, நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் இணைவது, ஏஆர் ரகுமான் இசை ஆகியவை பிளஸ் பாயிண்ட்களாக இருக்கும் நிலையில் இந்த படம் ’விக்ரம்’ படத்தை விட சாதனை வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை ஆர் மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் அவர்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.