இன்று அமெரிக்கா செல்லும் ரஜினியை சந்தித்த பாஜக பிரபலம்

  • IndiaGlitz, [Monday,April 23 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றிரவு அமெரிக்காவுக்கு செல்லவுள்ள நிலையில் சற்றுமுன் அவரை துக்ளக் ஆசிரியரும், பாஜக பிரமுகருமான குருமூர்த்தி சந்தித்து பேசியுள்ளார். ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த இந்த  சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் இறங்கவுள்ள நிலையில் அவரை ஒருசில அரசியல்வாதிகள் பாஜகவின் ஆதரவாளர் என்றும், காவியின் தூதுவர் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு பின்னால் பாஜக இல்லை என்றும், மக்களும் ஆண்டவனும் மட்டுமே உள்ளனர் என்றும் கூறியிருந்தார்

இந்த நிலையில் பாஜகவின் ஆதரவாளரும், தமிழக அரசை வழிநடத்துபவர் என்று கூறப்படுபவருமான குருமூர்த்தி, ரஜினியை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

நெட்டிசன்கள் கலாய்க்க போட்டோ கொடுத்து உதவிய நடிகை கஸ்தூரி

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ, வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் பயன்படுத்திய திட்டம் தோல்வி அடைந்தது என்பது தெரிந்ததே.

தனுஷின் 'மாரி 2' படத்தின் புதிய அப்டேட்

தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா', வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' மற்றும் பாலாஜிமோகன் இயக்கத்தில் 'மாரி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

26 வயது பெண்ணை மணந்த பின் டான்ஸ் ஆடிய நடிகர்

தமிழில் பச்சைக்கிளி  முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்தவர் மிலிந்த் சோமன்.

நிர்மலாதேவி விவகாரம்: தலைமறைவாக இருந்த பேராசிரியர் கைது

அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற நிர்மலாதேவியின் வழக்கை சிபிசிஐ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

'மெர்க்குரி' சென்னை ஓப்பனிங் வசூல் எப்படி?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, இந்துஜா மற்றும் பலர் நடித்த 'மெர்க்குரி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.