இப்பவே கல்யாணம் கட்டணும்… அழுது அடம் பிடிக்கும் சிறுவனின் க்யூட் வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணத்தை நினைத்து 20K கிட்ஸ்கள் மட்டும்தான் பயப்படாமல் சுற்றித் திரிகின்றனர். மற்றபடி திருமணம் என்றாலே ஏதோ ஒரு பேய், பூதம் ரேஞ்சுக்கு பயந்து, குடும்பத்தில் நடக்கும் சண்டை சச்சரவுகளை மீம்ஸ்களாக வெளியிடும் பழக்கமே அந்தக் காலம் தொட்டு தற்போதுவரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் உள்ள 3 வயதே ஆன சிறுவன் தனக்கு "இப்பவே திருமணம் செய்து வைக்க வேண்டும்" என்று தனது தாயிடம் அழுதுபுரண்டு, அடம் பிடிக்கும் க்யூட் வீடியோ சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உள்ள சிறுவன் அம்மா கல்யாணம் கட்டணும் என்று கேட்கிறான். அதற்கு பதிலளித்த அந்த தாய் பொண்ணு எங்க கிடைக்கும்? என அப்பாவியாக விளக்கம் அளிக்கிறார்.
அம்மாவின் கேள்வியை சாதுர்யமாக சமாளிக்கும் அந்த 3 வயது சிறுவன் "டிவியில் பொண்ணு கிடைக்கும். வெளியே போனால் பொண்ணு கிடைக்கும். இப்பவே கல்யாணம் பண்ணணும்" என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் வீடியோ தற்போது பலரது நெஞ்சையும் பதம் பார்த்திருக்கிறது.
வாழ்நாள் பாதியை வேலையில் கழித்துவிடும் பெற்றோர்கள் பலரும் தங்களுடைய குழந்தைகளை வளர்ப்பதற்கு இந்தக் கொரோனா பேருதவி செய்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தங்களுடைய குழந்தைகளின் கொஞ்சலையும் ஆர்ப்பாட்டங்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு பலருக்கும் வாய்த்திருக்கிறது. அதில் ஒன்றுதான் திருமணம் வேண்டும் என்ற 3 வயது சிறுவனின் க்யூட் வீடியோ.
கேரளாவில் சுமார் மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தாயிடம் கெ(கொ)ஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது#ViralVideo #Kerala pic.twitter.com/i9Ahq4BnUM
— M.Govindaraji (@RJGovind104) October 3, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments