ரூ.50 ஆயிரம் சம்பாதித்து கொரோனா நிதி கொடுத்த 3 வயது சிறுவன்

மும்பையைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கொரோனா நிதியாக ரூபாய் 50,000 கொடுத்துள்ளான் என்பதும் அந்தப் பணம் அவனே அவனது தாயார் உதவியுடன் சம்பாதித்தது என்பது குறித்த ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது.

மும்பை போலீஸ் கமிஷனரை இன்று காலை ஒரு மூன்று வயது சிறுவன் தனது பெற்றோருடன் சந்திக்க வந்தான். அவன் மும்பை போலீசாரிடம் கொரோனா நிதியாக ரூபாய் 50,000 கொடுத்தான். அதன் பின் அந்த சிறுவன் அந்த போலீசாரிடம் கூறியபோது ’கொரோனா வைரஸை பிடித்து உங்கள் துப்பாக்கியால் சுட்டு கொள்ளுங்கள் என்றும் நான் என்னுடைய நண்பர்களையும் தாத்தாவையும் பார்க்க வேண்டும் என்றும் இந்த பணத்தை மருந்துகள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்த சிறுவன் இந்த பணத்தை எப்படி சம்பாதித்தான் என்பது குறித்து போலீஸ் அதிகாரி கேட்டபோது தான் தன்னுடைய தாயார் உடன் இணைந்து கப்கேக் தயாரிப்பதாகவும், அதை விற்ற பணத்தில் தான் இந்த நிதி உதவி செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுவனின் தந்தை கூறியபோது தன்னுடைய மனைவியும் மகனும் இணைந்து கப் கேக்குகள் தயாரிக்கும் தொழில் தொடங்கினார்கள் என்றும், இந்த கப் கேக்குகள் முதலில் எங்களது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் விற்பனை செய்தோம் என்றும் ஆனால் தற்போது இந்த கப்கேக்கை தங்கள் பகுதியில் உள்ள அனைவரும் விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள் என்றும் வியாபாரம் நல்லபடியாக நடக்கிறது என்றும் கூறினார்.

தாங்கள் முதலில் ரூ.10 ஆயிரம் மட்டுமே டார்கெட் வைத்து இந்த தொழிலை செய்ததாகவும் ஆனால் தற்போது மாதம் 50 ஆயிரம் வரை வருமானம் கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனது மனைவியும் மூன்று வயது மகனும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் அவர்களால் தனக்கு பெருமை என்றும் அவர் கூறியுள்ளார்.

3 வயது சிறுவன் தன்னுடைய தாயாரின் உதவியால் சொந்தமாக சம்பாதித்த பணம் ரூ.50 ஆயிரத்தை கொரோனா தடுப்பு நிதியாக அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

குறைந்தது கொரோனா பாதிப்பு: தமிழகம், சென்னையில் இன்று எத்தனை பேர்?

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக 700க்கும் மேற்பட்டோர்கள் குறிப்பாக சென்னையில் 500க்கும் மேற்பட்டோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்

சொல்லவே தேவையில்லை: விஜய்சேதுபதி படத்தை விமர்சனம் செய்த நடிகர் செளந்தர்ராஜா

விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று  'க/பெ ரணசிங்கம்'. விஜய்சேதுபதியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும்  இந்தப் படத்தை குணசித்திர நடிகர் பெரிய கருப்புத்தேவர் மகன் விருமாண்டி

கொரோனா பாதித்த குழந்தைகளைத் தாக்கும் மர்மநோய்!!! எச்சரிக்கை விடுக்கும் நியூயார்க் மாகாணம்!!!

நியூயார்க்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 15 குழந்தைகளை  மேலும் ஒரு மர்மநோய் தாக்கியிருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியது.

இதிலும் கீழ்த்தரமான அரசியலா? 10ஆம் வகுப்பு மாணவி கொலை குறித்து பிரபல நடிகர்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக 10ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த மாணவி ஜெயஸ்ரீ பெட்ரோல் ஊற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கொரோனா நோயில் உடல் பருமனாக இருப்பதும் பெரிய ஆபத்தா??? மருத்துவக் காரணம் என்ன???

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான ஆபத்துக் காரணிகளில் வயதை அடுத்து உடல் பருமனும் முக்கிய காரணம் என்று புதிய ஆய்வு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.