ரூ.50 ஆயிரம் சம்பாதித்து கொரோனா நிதி கொடுத்த 3 வயது சிறுவன்
Send us your feedback to audioarticles@vaarta.com
மும்பையைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கொரோனா நிதியாக ரூபாய் 50,000 கொடுத்துள்ளான் என்பதும் அந்தப் பணம் அவனே அவனது தாயார் உதவியுடன் சம்பாதித்தது என்பது குறித்த ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது.
மும்பை போலீஸ் கமிஷனரை இன்று காலை ஒரு மூன்று வயது சிறுவன் தனது பெற்றோருடன் சந்திக்க வந்தான். அவன் மும்பை போலீசாரிடம் கொரோனா நிதியாக ரூபாய் 50,000 கொடுத்தான். அதன் பின் அந்த சிறுவன் அந்த போலீசாரிடம் கூறியபோது ’கொரோனா வைரஸை பிடித்து உங்கள் துப்பாக்கியால் சுட்டு கொள்ளுங்கள் என்றும் நான் என்னுடைய நண்பர்களையும் தாத்தாவையும் பார்க்க வேண்டும் என்றும் இந்த பணத்தை மருந்துகள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்த சிறுவன் இந்த பணத்தை எப்படி சம்பாதித்தான் என்பது குறித்து போலீஸ் அதிகாரி கேட்டபோது தான் தன்னுடைய தாயார் உடன் இணைந்து கப்கேக் தயாரிப்பதாகவும், அதை விற்ற பணத்தில் தான் இந்த நிதி உதவி செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுவனின் தந்தை கூறியபோது தன்னுடைய மனைவியும் மகனும் இணைந்து கப் கேக்குகள் தயாரிக்கும் தொழில் தொடங்கினார்கள் என்றும், இந்த கப் கேக்குகள் முதலில் எங்களது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் விற்பனை செய்தோம் என்றும் ஆனால் தற்போது இந்த கப்கேக்கை தங்கள் பகுதியில் உள்ள அனைவரும் விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள் என்றும் வியாபாரம் நல்லபடியாக நடக்கிறது என்றும் கூறினார்.
தாங்கள் முதலில் ரூ.10 ஆயிரம் மட்டுமே டார்கெட் வைத்து இந்த தொழிலை செய்ததாகவும் ஆனால் தற்போது மாதம் 50 ஆயிரம் வரை வருமானம் கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனது மனைவியும் மூன்று வயது மகனும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் அவர்களால் தனக்கு பெருமை என்றும் அவர் கூறியுள்ளார்.
3 வயது சிறுவன் தன்னுடைய தாயாரின் உதவியால் சொந்தமாக சம்பாதித்த பணம் ரூ.50 ஆயிரத்தை கொரோனா தடுப்பு நிதியாக அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout