பெற்றோர்களின் அலட்சியத்தால் மேலும் ஒரு குழந்தை பலி!

  • IndiaGlitz, [Wednesday,October 30 2019]

ஆழ்துளை கிணற்றை மூடாமல் அலட்சியமாக வைத்திருந்ததால் சுஜித் என்ற இரண்டு வயது சிறுவனின் மரணம், டிவி பார்த்து கொண்டிருந்த நேரத்தில் தூத்துகுடியில் மூன்று வயது குழந்தை குளியலறை தொட்டியில் விழுந்து மரணம் என நேற்று இரண்டு குழந்தைகள் பெற்றோர்களின் அலட்சியத்தால் பலியாகின.

இந்த நிலையில் இன்று காலை பன்ருட்டி அருகே கழிவுநீர் தொட்டியில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி மூன்று வயது சிறுமி பலியான நிலையில் அதேபோல் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று விருதுநகரில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் அருகே ஒண்டிப்புலி நாயக்கனூரை சேர்ந்தவர் திருமூர்த்தி என்பவரின் 3 வயது மகன் உத்ரன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென சிறுவனை வெகுநேரமாக காணவில்லை என பெற்றோர்கள் தேடியுள்ளனர்.

இந்த நிலையில் வீட்டின் அருகே, சுமார் 4 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் சிறுவன் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அதையடுத்து சிறுவனை மீட்டு உடனடியாக அவனது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர் அந்த சிறுவனை பரிசோதித்து அவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து பெற்றோர்கள் கதறி அழுதனர். பெற்றோர்களின் அலட்சியத்தாலும் சமூக பொறுப்பின்றி ஆழ்துளை, கழிவுநீர் தொட்டி, மழைநீர் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றை மூடாமல் வைத்திருப்பதாலும் குழந்தைகளின் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது

More News

குறைகிறது ஆண்களின் திருமண வயது! இனி பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணமா?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பெண்களின் திருமண வயது 18 என்பதும், ஆண்களின் திருமண வயது 21 என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இருபாலருக்கும் வாக்களிக்க 18 வயது இருந்தால்

தொடர்கதையாகும் பெற்றோர்களின் அலட்சியம்: இன்றும் ஒரு குழந்தை பலி!

ஒரு குழந்தையை 5 வயது வரை வளர்ப்பது என்பது ஒரு மிகப்பெரிய கலை ஆகும். ஒரு குழந்தையை பிரசவிக்க பத்து மாதங்கள் மட்டும் போதும். ஆனால் அந்த குழந்தையை பாதுகாப்புடன் வளர்ப்பது

ரூ.200 கோடியை நெருங்கும் 'பிகில்' வசூல்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் தீபாவளி விருந்தாக அக்டோபர் 25ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

'கைதி' படத்தின் ஆச்சரியமான வசூல் விபரங்கள்

விஜய் நடித்த பிகில் என்ற பெரிய பட்ஜெட் படத்துடன் கடந்த தீபாவளி தினத்தில் துணிச்சலுடன் வெளியான 'கைதி' படக்குழுவினர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஆச்சரியத்தக்க வசூலை பெற்று வருகிறது.

இயக்குனர் பாரதிராஜா வீட்டில் ஒரு கிலோ வெள்ளி திருட்டு!

இயக்குனர் இமயம் பாரதிராஜா வீட்டில் ஒரு கிலோ வெள்ளி உள்பட லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.