யூடியூபில் ஆபாச விமர்சனம்: அடித்து உதைத்த பெண்களால் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,September 29 2020]

பெண்களை ஆபாசமாக விமர்சனம் செய்து யூடியூபில் வீடியோ பதிவு செய்த ஒருவரை மூன்று பெண்கள் இணைந்து அடித்து உதைத்த வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கடந்த சில வருடங்களாகவே யூடியூபில் வீடியோ சேனலை தொடங்கி இஷ்டத்துக்கு விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யூடியூபில் பதிவு செய்யப்படும் பல வீடியோக்கள் சர்ச்சைக்குள்ளாகி சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜய்நாயர் என்பவர் யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தும் கொச்சைப்படுத்தியும் வீடியோக்களை வெளியிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பின்னணி குரல் கலைஞர் பாக்யலட்சுமி மற்றும் மகளிர் அமைப்பைச் சேர்ந்த சிலர் விஜய்நாயர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் விஜய் நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாக்யலட்சுமி உள்பட 3 பெண்கள் மீது காவல்துறையினர் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் யூடிபில் பெண்களை ஆபாசமாக விமர்சனம் செய்த விஜய்நாயர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மதுரை ஐகோர்ட்டில் திடீரென மனுதாக்கல் செய்த நாகர்கோயில் காசி: பரபரப்பு தகவல்!

தன் மீதான வழக்கில் தனக்கு ஆதரவாக வாதாட வக்கீல்கள் யாரும் இல்லாததால் தனக்கு சட்ட உதவி கிடைக்கவில்லை என்றும் எனவே தன் மீதான வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்

புதியவகை நோய்த்தொற்றுக்கு 4 ஆம் கட்ட அவசர நிலையைப் பிறப்பித்துள்ள சீனா!!! பரபரப்பு தகவல்!!!

கடந்த ஜுன் மாத இறுதியில் சீனாவில் ஒரு புதிய வகை மர்மநோய் பரவி வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியானது.

சிவகார்த்திகேயன் பட நடிகர் தூக்கில் தொங்கி தற்கொலை: பரபரப்பு தகவல்

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான 'மெரினா' என்ற படத்தில் நடித்த நடிகர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

பெருந்தலைவர்களை அடுத்து கட்சிக்குள் இபிஎஸ்க்கு குவியும் ஏகபோக ஆதரவு… தொண்டர்கள் குதூகலம்!!!

நேற்று சென்னையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இந்தக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

எந்திரன் கதை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற இயக்குனர் ஷங்கர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'எந்திரன்'. இந்தத் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில்