கடலை போடுவதற்கு இத்தனை லட்சம் சம்பளம் சம்பளமா? அசல் கோலாருக்கு அடித்த அதிர்ஷடம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளராக சென்று பிரபலமாக வேண்டும் என்றும் அந்த பிரபலத்தை வைத்து சின்னத்திரை மற்றும் பெரிய திரைகளில் வாய்ப்புகள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பலர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்கு செல்கின்றனர். ஒருசிலர் பிக்பாஸ் டைட்டிலை வென்றே ஆகவேண்டும் என்ற உறுதியுடன் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோலார் பெண்களிடம் கடலை போடுவதற்காகவே பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே தனது லீலைகளை பெண் போட்டியாளர்களிடம் காண்பித்தார். முதலில் குயின்சியை தான் குறி வைத்ததாகவும், ஆனால் அவர் செட் ஆகவில்லை என்பதால் அதனை அடுத்து ஒவ்வொரு போட்டியாளர்களாக கடலை போட்டு கடைசியில் நிவாஷினியை செட் செய்துவிட்டார் என்றே கூறப்படுகிறது.
இரண்டே வாரங்களில் நிவாஷினி மடியில் தலைவைத்து படுக்கும் அளவுக்கு இருவரும் நெருக்கமாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடுப்பான பார்வையாளர்கள் அசலுக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்ப வேண்டும் என்று பதிவு செய்தனர். ஆனால் இரண்டாவது வாரமே அவர் இரண்டாவது போட்டியாளராக எவிக்சன் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் அசலுக்கு தினமும் ரூ.15,000 சம்பளம் பேசப்பட்டு இருந்ததாகவும், அவர் மூன்று வாரம் வீட்டில் இருந்ததை அடுத்து 22 நாட்களுக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. சம்பளம் குறித்த தகவல் அதிகாரபூர்வமானது இல்லை என்றாலும் அசலுக்கு குறைந்தது மூன்று லட்சத்திற்கு மேல் கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டிற்கு சென்று மூன்று வாரம் கடலை போடுவதற்கு 3 லட்சமா? என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments