ஷங்கரின் அடுத்த படத்தில் மூன்று வில்லன்களா? யார் யார்?

  • IndiaGlitz, [Tuesday,March 19 2024]

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ மற்றும் ராம்சரண் தேஜா நடித்து வரும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களை இயக்கி வரும் நிலையில் இதில் ’கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் மூன்று வில்லன்கள் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராம் சரண் தேஜா மற்றும் க்யாரா அத்வானி ஜோடியாக நடித்து வரும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது

தமன் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இப்போதே இந்த படத்தின் பட்ஜெட் ரூ.175 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பிரம்மாண்டமான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் மூன்று வில்லன்கள் நடித்திருப்பதாக தெரிகிறது. அவர்களில் முக்கிய வில்லன் எஸ்ஏ சூர்யா என்றும் இதனை அடுத்து ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா ஆகிய இருவரும் வில்லன்களாக நடித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது

மேலும் குணச்சித்திர கேரக்டரில் சமுத்திரக்கனி, நாசர் , வைபவ் ரெட்டி, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் கதையில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இசைஞானி இளையராஜாவின் பயோபிக் திரைப்படம்.. தனுஷின் முக்கிய அறிவிப்பு..!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இளையராஜாவின் கேரக்டரில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

'விடாமுயற்சி' படப்பிடிப்பு தாமதம் எதிரொலி.. அதிரடி முடிவெடுத்த அஜித்.. வைரல் புகைப்படம்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மார்ச் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என்று செய்திகள்

உண்மையை உடைத்த ரீனா! ரதியின் பதில் என்ன? விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஹார்ட் பீட் சீரிஸ் !!

'ஹார்ட் பீட்' சீரிஸ் ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, இதயத்தை வருடும் பொழுதுபோக்கு சீரிஸாக,  ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கி வருகிறது. 

கிராபிக்ஸ் காட்சிகளின் பிரமாண்டம்.. சூர்யாவின் அசத்தல் கெட்டப்.. 'கங்குவா' டீசர்..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாக

சௌந்தர்யா ரஜினியின் புதிய வெப் தொடர்.. ஹீரோ, ஹீரோயினை அறிவித்த அமேசான் ப்ரைம்..!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவான வெப் தொடர் ஒன்றை விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக அமேசான் பிரைம் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.