விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 3 தமிழர்களின் நிலை என்ன?

நேற்று இரவு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி இரண்டாக பிளந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விமான விபத்தில் இதுவரை 19 பேர் பலியாகி உள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த மூன்று தமிழர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது

தமிழ் நாட்டைச் சேர்ந்த ஃபைசல் என்பவரின் மனைவி ஷானிஷா மற்றும் அவரது 5 வயது மகன் முகமது ஜிடான் ஆகிய இருவர் இந்த விமானத்தில் பயணம் செய்ததாகவும், மேலும், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் பயணம் செய்ததாகவும் இந்த விமானத்தில் பயணம் செய்த மூன்று தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

More News

கோழிக்கோடு விமான விபத்து: உயிரிழந்த விமானியின் வீரமரணம் அடைந்த குடும்பம்!

நேற்று இரவு சுமார் 7.30 மணிக்கு துபாயில் இருந்து 191 பயணிகளுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென விபத்துக்குள்ளானது.

கோழிக்கோடு விமான விபத்து: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்கள்!

நேற்றிரவு துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென விபத்துக்குள்ளானதில் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும்

ராணா திருமணத்தில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் யார் யார்?

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தவர் ராணா டகுபதி என்பது தெரிந்ததே

'மாஸ்டர்' படத்திற்கு பின் நிறைவேறாத மாளவிகாவின் ஆசை!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக திட்டமிடப்பட்டு இருந்தது

வீட்டுக் கொல்லையில் சுரங்கம் தோண்டியவருக்கு அடித்தது அடுத்த லாட்டரி!!!

ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த ஒரு ஏழை நாடு தான்சானியா. இந்நாட்டில் அதிகளவு கனிம வளங்கள் கிடைக்கின்றன.