22வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 3 தமிழ் படங்கள்.. என்னென்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்ற நிலையில் அதில் பல திரைப்படங்கள் திரையிடப்பட்டன என்பதும் அவை ரசிகர்களால் ரசித்து பார்க்கப்பட்டன என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த கட்டமாக புனேவில் 22வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது.
வரும் ஜனவரி 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை இந்த விழா நடைபெற நிலையில் இந்தியாவின் பல மொழி திரைப்படங்கள் இதில் திரையிடப்பட உள்ளன. இந்த நிலையில் 3 தமிழ் திரைப்படங்கள் இதில் திரையிட தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றி மாறனின் ’விடுதலை’ சீனு ராமசாமியின் ’இடிமுழக்கம்’ மற்றும் ஜெயப்பிரகாஷின் ’காதல் என்பது பொதுவுடமை’ ஆகிய படங்கள் 22 வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
அதேபோல் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ’இடிமுழக்கம்’ திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ், காயத்ரி நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. ’காதல் என்பது பொதுவுடமை’ என்ற படத்தில் ஜெயப்பிரகாஷ் ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் மலையாளத்தில் மம்முட்டி, ஜோதிகா நடித்த ’காதல் தி கோரி’, ஜோஜு ஜார்ஜ் நடித்த ’இரட்டா’ ஆகிய படங்களும் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout