'மாமன்னன்' உள்பட 3 தமிழ்ப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

  • IndiaGlitz, [Thursday,July 27 2023]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தபட்சம் நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த வாரம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’மாமன்னன்’ உள்பட 3 தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன.

’மாமன்னன்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் 50 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நாளை வெளியாக உள்ளது.

அதேபோல் சுனைனா நடித்த ’ரெஜினா’ என்ற திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ சினிமாவில் ஊர்வசி முக்கிய வேடத்தில் நடித்த பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான ’அப்பத்தா’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த மூன்று தமிழ் படங்களை அடுத்து ’ஸ்பை’ என்ற தெலுங்கு திரைப்படம் அமேசான் ப்ரைமிலும் மற்றும் ’போலீஸ் ஸ்டோரி கேஸ் 1 ‘ என்ற தெலுங்கு திரைப்படம் இடிவி வின் என்ற ஓடிடியிலும் வெளியாகவுள்ளது.

மேலும் ‘கொல்லா’ என்ற மலையாள திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியிலும், ஆஹா ஓடிடியில் ’Samajavaragamana’ என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாகிறது.

More News

குறுகிய மனப்பான்மையுடன் இருக்க வேண்டாம்.. தமிழ் சினிமா உலகினருக்கு பிரபல தெலுங்கு நடிகர் அறிவுரை..!

தமிழ் சினிமா உலகினர் குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வரவேண்டும் என்றும் அப்பொழுதுதான் உலகளாவிய திரைப்படங்களை தர இயலும் என்றும் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழ் சினிமா உலகினருக்கு அறிவுரை

 'இவன் ரூட்டே வேறு': சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' ஜூஜூபி பாடல் ரிலீஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே

ரசிகர்கள் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது.. பிகினி உடையில் கெளரி கிஷான்..

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' என்ற திரைப்படத்தில் சிறு வயது த்ரிஷாவாக நடித்திருந்த கௌரி கிஷான் சமீபத்தில் மாலத்தீவு சென்று இருந்த நிலையில் அங்கிருந்து கொண்டு அவர் கிளாமர்

நிறைமாத கர்ப்பிணியான இலியானா.. டெலிவரி எப்போது?

நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் ரசிகர்கள்

'கேப்டன் மில்லர்' டீசர் ரிலீஸ் ஆகும் நேரம்.. ஜிவி பிரகாஷ் வெளியிட்ட முக்கிய தகவல்..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.