சூப்பர் ஹிட் படம் உட்பட இன்று முதல் 3 தமிழ் படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

  • IndiaGlitz, [Friday,July 05 2024]

திரையரங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் உள்பட 3 தமிழ் படங்கள் மற்றும் சில மற்ற மொழி படங்களும் இன்று ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்பட பலர் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான ’கருடன்’ திரைப்படம் திரையரங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்று 50 கோடிக்கும் அதிகமாக வசூலானது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. திரையரங்கு போலவே ஓடிடியிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மோகன் நடித்த ’ஹரா’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் இன்று ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதே ஆஹா ஓடிடியில் சரத்குமார், கௌதம் மேனன், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்த ’ஹிட்லிஸ்ட்’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேற்கண்ட 3 தமிழ் படங்களுடன் இன்று வெளியாகும் மற்ற மொழி படங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

’மார்க்கெட் மகாலட்சுமி’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், ’சசிமந்தனம்’ என்ற தெலுங்கு படம் ஈடிவி வின் என்ற ஓடிடியில், ’மலையாளி ஃப்ரம் இந்தியா’ என்ற மலையாள படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகின்றன.