காதலர் தினத்தில் 3 ரொமான்ஸ் படங்கள் ரிலீஸ்.. காதல் ஜோடிகளுக்கு செம்ம விருந்து..!

  • IndiaGlitz, [Saturday,October 12 2024]

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தில் சில ரொமான்ஸ் படங்கள் வெளியாகி வரும் நிலையில், அடுத்த ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி இந்த மூன்று தமிழ் ரொமான்ஸ் திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில், ஜெயம் ரவியுடன் நித்யா மேனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் காதலர் தினத்தில் வெளியாகும் இன்னொரு ரொமான்ஸ் திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகிய இந்த படம், நிச்சயம் காதலர் தினத்திற்கான ஒரு பொருத்தமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவான ஒன்ஸ்மோர் திரைப்படமும் காதலர் தினத்தில் வெளியாகவுள்ளது.

அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் மூன்று ரொமான்ஸ் திரைப்படங்கள் வெளியாக இருப்பதால், காதல் ஜோடிகளுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில படங்கள் அதே நாளில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.