தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு டெல்டா பிளஸ்: அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்
- IndiaGlitz, [Friday,June 25 2021]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் கொரோனா வைரஸை விட அபாயகரமான டெல்டா பிளஸ் என்ற உருமாறிய புதியவகை வைரஸ் இந்தியாவில் பரவி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சிகிச்சைக்குப்பின் குணம் ஆனதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பரவி இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள், டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸை பரிசோதனை செய்யும் மையத்தை விரைவில் சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கபப்ட்டு தற்போதுதான் சென்னை உள்பட தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.