'தளபதி 63' படத்தில் இணைந்த மூன்று வில்லன்கள்!

  • IndiaGlitz, [Monday,January 21 2019]

தளபதி விஜய் நடிக்கும் 63வது படமான 'தளபதி 63' படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. முதல் ஷாட்டை விஜய் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். நேற்று விஜய் சம்பந்தப்பட்ட ஒருசில காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 'தளபதி 63' படத்தின் பூஜை குறித்த ஸ்டில்கள் மற்றும் வீடியோ வெளிவந்துள்ளது. படக்குழுவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த பூஜையில் ஆனந்த்பாபு, டேனியல் பாலாஜி மற்றும் சாய்தீனா கலந்து கொண்டனர். இதில் இருந்து இவர்கள் மூவரும் இந்த படத்தின் வில்லன்களாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. விஜய் நடித்த முந்தைய படமான 'சர்கார்' படத்திலும் பழ.கருப்பையா, ராதாரவி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியா மூன்று நெகட்டிவ் கேரக்டர்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்துராஜ் கலை இயக்கத்தில் ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. மேலும் 'வில்லு' படத்திற்கு பின் 10 வருடம் கழித்து விஜய்யுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'விஸ்வாசம்' குறித்து தமிழக முதல்வர் கூறியது என்ன?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நெல்லையில் நடந்த பிரமாண்ட கூட்டம் ஒன்றில் 'விஸ்வாசம்' குறித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டத்திற்கு சென்ற விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்'

விஜய்சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார், மீண்டும் விஜய்சேதுபதி நடித்து வரும் ஒரு படத்தை இயக்கி வந்தார்

அஜித் ரசிகர்கள் தாமரையை மலர செய்வார்கள்: தமிழிசை நம்பிக்கை

திருப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணையும் விழாவில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்

தளபதி 63' படத்தின் பூஜை தொடங்கியது!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள 'தளபதி 63' படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில்

சிவகார்த்திகேயன் இயக்குனரின் அடுத்த படத்தில் கார்த்தி?

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் அவர் அடுத்ததாக 'மாநகரம்' இயககுனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.