சென்னையில் மேலும் 3 கொரொனா நோயாளிகள்: மொத்த எண்ணிக்கை 15 ஆனது

கொரோனா வைரஸால் நேற்று மூவர் தாக்கப்பட்டு தமிழகத்தில் கொரோனா தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்த நிலையில் தற்போது சென்னையில் மட்டும் மேலும் மூவர் கொரோனாவால் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய 74 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய 52 வயது பெண் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கபப்ட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து திரும்பிய 25 வயது பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள மூவரையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும் 15ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது