சென்னையில் மேலும் 3 கொரொனா நோயாளிகள்: மொத்த எண்ணிக்கை 15 ஆனது

கொரோனா வைரஸால் நேற்று மூவர் தாக்கப்பட்டு தமிழகத்தில் கொரோனா தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்த நிலையில் தற்போது சென்னையில் மட்டும் மேலும் மூவர் கொரோனாவால் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய 74 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய 52 வயது பெண் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கபப்ட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து திரும்பிய 25 வயது பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள மூவரையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும் 15ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

டாஸ்மாக் கடைகளில் வரலாறு காணாத கூட்டம்: 8 நாட்களுக்கும் சேர்த்து வாங்கும் குடிமகன்கள்

கொரோனா வைரஸ் பீதி காரணமாக இன்று மாலை 6 மணியிலிருந்து தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. காய்கறி, பால், மருந்து போன்ற அத்தியாவசிய தேவை

ஆபத்தான நிலையில் மதுரை கொரோனா நோயாளி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக இருந்த நிலையில் நேற்று மேலும் மூவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

இணையத்தில் வைரலாகும் விஜய் பைக் சேசிங் காட்சி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினி, விஜய்சேதுபதி கொடுத்தது எவ்வளவு?

கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் பெப்சி தொழிலாளர்களுக்கு திரையுலக பிரபலங்கள் உதவிகளை குவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

பெப்சி தொழிலாளர்களுக்காக கலைப்புலி தாணு செய்த உதவி!

கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சினிமா படப்பிடிப்பு நடைபெறாததால் சினிமா தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கடும் சிக்கலில் உள்ளனர்