தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா: 18 வயது இளைஞரும் ஒருவர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் 18 வயது இளைஞரும் ஒருவர் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்
18 வயது இளைஞர் ஒருவருக்கும், துபாயில் இருந்து சென்னை திரும்பிய 63 வயது நபர் ஒருவருக்கும், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 66 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதில் துபாயில் இருந்து திரும்பிய வாலாஜாவை சேர்ந்தவர் என்றும், அவர் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் பெருந்துறை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 18 வயது இளைஞரும் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் மேலும் மூவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
#UPDATE: 3 new positive cases of #covid19 in TN. 18 Y M contact of 2nd Pt at #RGGH. 63 Y M Dubai return at #Walajah GH. 66 Y M contact of Thai nationals at #IRTT, Perundurai. Pts are in isolation & stable. @MoHFW_INDIA #TNHealth @CMOTamilNadu #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments