தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா: 18 வயது இளைஞரும் ஒருவர்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் 18 வயது இளைஞரும் ஒருவர் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்

18 வயது இளைஞர் ஒருவருக்கும், துபாயில் இருந்து சென்னை திரும்பிய 63 வயது நபர் ஒருவருக்கும், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 66 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதில் துபாயில் இருந்து திரும்பிய வாலாஜாவை சேர்ந்தவர் என்றும், அவர் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் பெருந்துறை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 18 வயது இளைஞரும் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் மேலும் மூவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

More News

ரஷ்யா தீவுகளில் 7.5 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!! சிறிய சுனாமி அலைகள்!!!

இன்று காலை ரஷ்யாவின் குரில் தீவுகளில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

பெப்சி தொழிலாளர்களுக்கு 100 மூட்டை அரிசி கொடுத்த பிரபல நடிகை

கொரோனா வைரஸ் காரணமாக தமிழ் திரைப்பட படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்களான பெப்சி தொழிலாளர்கள் கடும் கஷ்டத்தில் இருப்பதாகவும் வருமானமின்றி

'தல' வீட்ல இருக்காரு, நீங்களும் வீட்ல இருங்க: திமுக எம்.எல்.ஏ வேண்டுகோள்

கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் இதன் தீவிரத்தை உணர்ந்து, தங்களை தாங்களே வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்வது

ஊரடங்கு உத்தரவிற்கு பின்னரும் டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்: அதிர்ச்சி தகவல்

உலகமெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வரும் நிலையில் இந்தியாவிலும் சுமார் 500 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி விட்டது.

வாயில்லா ஜீவன்களையும் காப்பாற்றுங்கள்: பிரபல நடிகை வேண்டுகோள்

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளவும் நேற்று நடிகை வரலட்சுமி ஒரு வீடியோ பதிவு செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்