டீசரில் கூட வெளியாகாத மதுராந்தகர், சுந்தர சோழர் கேரக்டர்கள்: லைகா வெளியிட்ட வீடியோ

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இம்மாதம் 30ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பாக வரும் 6ஆம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் கேரக்டர்கள் புகைப்படங்கள் வீடியோக்களை அவ்வப்போது லைகா நிறுவனம் வெளியிட்டு வரும் நிலையில் நேற்று இந்த படத்தில் வானதி கேரக்டரில் நடித்த சுபிதா துலிபாலா போஸ்டரும், பூங்குழலி கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி போஸ்டரும் வெளியானது.

இந்த நிலையில் லைகா நிறுவனம் சற்றுமுன் டீசரில் கூட வெளியாகாத சுந்தர சோழன், மதுராந்தகன் மற்றும் செம்பியன் மாதேவி ஆகிய கேரக்டர்களின் புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டு லைகா நிறுவனம் வைரலாக்கியுள்ளது. சுந்தரசோழர் கேரக்டரில் பிரகாஷ்ராஜ், மதுராந்தகன் கேரக்டரில் ரகுமான் மற்றும் செம்பியன்மாதேவி கேரக்டரில் ஜெயசித்ரா ஆகியோர் நடித்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

30 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணையும் பிரபல ஹீரோ!

 30 ஆண்டுகளுக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பிரபல தமிழ் சினிமா ஹீரோ இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

'இந்தியன் 2' படப்பிடிப்பு: கமல், காஜல் அகர்வால் கலந்து கொள்வது எப்போது?

 உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தை

பிரமிப்பின் பிரமாண்டம்: ஒரு புகைப்படத்தில் கூட முகத்தை காட்டாத ரம்யா பாண்டியன்!

தஞ்சை பெரிய கோவிலில் நடிகை ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த பதிவுக்கு 'பிரமிப்பின் பிரம்மாண்டம்'

சத்யராஜ் மகளா இப்படி? செம கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள்!

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பதும், அனைவருக்கும் ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்றும், குறிப்பாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவே

'லைகர்' படுதோல்வியால் அதிர்ச்சி அடைந்த சிம்பு பட நடிகை: ஆறுதல் கூறிய விஜய் தேவரகொண்டா!

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்த 'லைகர்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், அந்த படம் படுதோல்வி அடைந்து படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.