இரட்டை குழந்தைகள் விவகாரம்: விக்கி- நயனிடம் விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு!
- IndiaGlitz, [Thursday,October 13 2022]
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் குறித்து விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் 9ஆம் தேதி நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நடந்த நான்கே மாதத்தில் தாங்கள் அம்மா அப்பா ஆகிவிட்டதாக விக்னேஷ் சிவன் அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதனையடுத்து நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று இருக்கலாம் என்று கூறப்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறினார்
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிகளின் இரட்டை குழந்தைகள் விவகாரம் தொடர்பாக இணை இயக்குனர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவினர் விசாரணையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
மருத்துவமனையின் விசாரணை முடிந்த பிறகு தேவைப்பட்டால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிடம் விசாரணை மேற்கொள்ள சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நயன்தாராவின் குழந்தைகளை பெற்றெடுத்த வாடகைத் தாய் துபாயில் இருப்பதாகவும் துபாயில் அவருடைய அண்ணன் ஏற்பாட்டில் தான் இந்த குழந்தைகள் பெறப்பட்டது என்றும் கூறப்பட்டு வருகிறது. துபாயில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொள்வதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதால் நயன்தாரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் கூறப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் விசாரணையின் முடிவில் தான் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது