3 மணி நேர 'விடுதலை' படத்தை பார்க்க வேண்டுமா? இதோ ஒரு சூப்பர் அறிவிப்பு..
Send us your feedback to audioarticles@vaarta.com
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்த ‘விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படம் ஜி5 தொலைக்காட்சியில் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. ‘விடுதலை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது அதன் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் என்று இருந்த நிலையில் தற்போது 3 மணி நேர திரைப்படமாக ஜீ5 தொலைக்காட்சியில் ஏப்ரல் 28ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இதில் சுமார் 24 நிமிடங்கள் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் படத்தின் நீளம் காரணமாக திரையரங்குகளில் வெளியான ‘விடுதலை’ படத்தில் வெட்டப்பட்ட காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ‘விடுதலை’ படத்தை ஏற்கனவே திரையரங்குகளில் பார்த்தவர்களும் இந்த படத்தை தொலைக்காட்சியில் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Witness the uncut, unseen, unbelievable extended version of #ViduthalaiPart1 Director’s cut on zee5tamil premiers on 28th April.#VetriMaaran @ilaiyaraaja @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @BhavaniSre @GrassRootFilmCo @VelrajR @dirrajivmenon pic.twitter.com/u9F3QHKm3q
— ZEE5 Tamil (@ZEE5Tamil) April 27, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments