'சர்தார் 2' படத்தில் இந்த 3 நாயகிகளா?  ஏற்கனவே இணைந்த நடிப்பு அரக்கன்.. வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Monday,July 29 2024]

கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’சர்தார் 2’ படத்தில் 3 பிரபல நடிகைகள் இணைய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’சர்தார்’ படத்தில் கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா ஆகிய மூன்று நடிகைகள் நடித்திருந்தனர் என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த மூன்று நடிகைகளும் இல்லை என்று கூறப்படுகிறது.

அதற்கு பதிலாக இந்த படத்தில் மாளவிகா மோகனன் அல்லது பிரியங்கா மோகன் ஆகிய இருவரில் ஒருவர் அல்லது இருவரும் நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அது மட்டும் இன்றி மேலும் ஒரு முக்கிய வேடத்தில் பிரபல கன்னட, தெலுங்கு நடிகை ஆஷிகா ரகுநாத் நடிக்க இருப்பதாகவும் இந்த மூன்று நடிகைகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஆஷிகா ரகுநாத் ஏற்கனவே அதர்வா நடித்த ’பட்டத்து அரசன்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். அது மட்டும் இன்றி அவர் தற்போது ’மிஸ் யூ’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தில் கார்த்தியுடன் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்னும் யாரெல்லாம் இந்த படத்தில் இணைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.