'சர்தார் 2' படத்தில் இந்த 3 நாயகிகளா?  ஏற்கனவே இணைந்த நடிப்பு அரக்கன்.. வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Monday,July 29 2024]

கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’சர்தார் 2’ படத்தில் 3 பிரபல நடிகைகள் இணைய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’சர்தார்’ படத்தில் கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா ஆகிய மூன்று நடிகைகள் நடித்திருந்தனர் என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த மூன்று நடிகைகளும் இல்லை என்று கூறப்படுகிறது.

அதற்கு பதிலாக இந்த படத்தில் மாளவிகா மோகனன் அல்லது பிரியங்கா மோகன் ஆகிய இருவரில் ஒருவர் அல்லது இருவரும் நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அது மட்டும் இன்றி மேலும் ஒரு முக்கிய வேடத்தில் பிரபல கன்னட, தெலுங்கு நடிகை ஆஷிகா ரகுநாத் நடிக்க இருப்பதாகவும் இந்த மூன்று நடிகைகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஆஷிகா ரகுநாத் ஏற்கனவே அதர்வா நடித்த ’பட்டத்து அரசன்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். அது மட்டும் இன்றி அவர் தற்போது ’மிஸ் யூ’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தில் கார்த்தியுடன் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்னும் யாரெல்லாம் இந்த படத்தில் இணைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'வணங்கான்' படத்தின் முதல் விமர்சனம் கொடுத்த பிரபலம்.. என்ன சொல்லியிருக்கார்?

பாலா இயக்கத்தில் உருவான 'வணங்கான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தை பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படம் குறித்த தனது கருத்தை

'கோட்' தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியின் 'மன்னிப்பு' பதிவு.. என்ன காரணம்?

தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'கோட்' படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி திடீரென தனது சமூக வலைத்தளத்தில் 'சாரி' என பதிவு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'டிமான்டி காலனி 2' படத்தின் சென்சார் தகவல்..  ஆகஸ்ட் 15 ரிலீஸ்..!

அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி 2'  திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியில் ரீமேக் ஆகிறதா 'மகாராஜா'? உரிமையை வாங்கிய பிரபல நடிகர்..!

விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்த நிலையில் இந்த படம் இந்தியிலும் ரீமேக் செய்ய இருப்பதாகவும்

விஜய் அழைத்தால் அவருடைய கட்சியில் சேருவேன்: பிரபல இயக்குனர்

விஜய் அழைத்தால் அவருடைய கட்சியில் சேருவேன் என்று பிரபல இயக்குனர் ஒருவர் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.