close
Choose your channels

'தளபதி 69' படத்தில் இந்த மூன்று பிரபலங்களா? வேற லெவல் தகவல்கள்..!

Tuesday, January 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 68 வது திரைப்படமான ’GOAT’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 69வது திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தில் மூன்று பிரபலங்கள் தளபதி விஜய்யுடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் எப்போதும் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த திரைப்படத்தின் சில முக்கிய முடிவுகளை எடுத்து விடுவார். அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் ஆகியவர்களை தளபதி விஜய் முன்கூட்டியே முடிவு செய்து அந்த படத்திற்கான பணியையும் தொடங்க அனுமதிப்பார்.

இந்த நிலையில் தற்போது ’GOAT’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி முடிவடைந்த நிலையில் அவரது அடுத்த படம் குறித்த ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது கார்த்திக் சுப்புராஜ் என்றும் இந்த படத்தில் சந்தோஷ நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. எனவே ’தளபதி 69’ திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகிய மூன்று பிரபலங்கள் இணையே இருப்பதாக கூறப்படும் வேற லெவல் தகவல் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment