ஜூலை 1ல் மோதும் 3 பிரபலங்களின் படங்கள்: மூன்றும் வெற்றி பெறுமா?

  • IndiaGlitz, [Saturday,June 25 2022]

வரும் ஜூலை 1ஆம் தேதி மூன்று பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசாகவிருக்கும் நிலையில் மூன்றில் எந்த படம் வெற்றி பெறும் அல்லது மூன்றும் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

பிரபல நடிகர் மாதவன் நடித்து, தயாரித்து, இயக்கிய திரைப்படம் ‘ராக்கெட்டரி’ இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வரும் ஜூலை 1ஆம் தேதி ரிலீசாக உள்ளது. விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் முதல் முறையாக இயக்குனர் ஹரி மற்றும் அருண்விஜய் இணைந்து உருவாக்கிய ’யானை’ திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ஏற்கனவே ஒரு சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு அதன்பின் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது ஜூலை 1இல் உறுதியாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் டீசர் ஆகியவை மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு பொருத்தமான கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் மிகச் சில நடிகர்களில் அருள்நிதியும் ஒருவர். அந்த வகையில் தொடர்ந்து திகில் படங்களில் நடித்து வெற்றி பெற்று வரும் அருள்நிதி நடித்த அடுத்த திகில் படம் தான் ‘டிபிளாக்’ . இந்த படத்தின் டிரைலர் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் இந்த படமும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே ’ராக்கெட்டரி’, ‘யானை’ மற்றும் ‘டி பிளாக்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் வரும் 1ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் மூன்றுமே வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் திரையுலகில் தெரிவித்து வருகின்றனர்.