பிரதீப் மீண்டும் உள்ளே வருகிறாரா? பிக்பாஸ் அறிவிப்பால் அதிர்ச்சியாகும் போட்டியாளர்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை எலிமினேஷன் செய்யப்பட்டவர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இந்த நிலையில் மேலும் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வர உள்ளார்கள் என்றும் டாஸ்க்கில் அவர்கள் வெற்றி பெற்றால் போட்டியில் தொடர்வார்கள் என்றும் தற்போது இருக்கும் போட்டியாளர்கள் சிலர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் பிக் பாஸ் வெளியிட்ட அறிவிப்பில் இந்த வாரம் முழுவதும் டாஸ்க்குகளின் வடிவத்தில் மூன்று பூகம்பங்கள் இந்த வீட்டை தாக்கும். நீங்கள் நாமினேட் செய்து பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்பிய 3 போட்டியாளர்கள் உங்கள் எல்லோரிடமும் கடினமாக போட்டி போட வீட்டிற்குள் வருவார்கள்.
இந்த வீட்டை விட்டு வெளியேறும் நபர்களின் எண்ணிக்கையிலும் மாற்றம் இருக்கும். இந்த மூன்று டாஸ்க்களில் வெற்றி பெற்று இந்த வீட்டில் இருக்கிற போட்டியாளர்களின் நிலையை பாதுகாக்க வேண்டுமா அல்லது எக்ஸ் போட்டியாளர்களுக்கு சிவப்பு கம்பளம் எடுத்து வரவேற்க போறீங்களா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று பிக்பாஸ் கூறுகிறார்.
எக்ஸ் போட்டியாளர்கள் என்றால் அதில் பிரதீப்பும் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com