தூத்துகுடி பதட்டம் எதிரொலி: 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்
- IndiaGlitz, [Wednesday,May 23 2018]
தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டதால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 11 பேர் கொல்லப்பட்ட நிலையில் இன்றும் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்
இந்த நிலையில் போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க தூத்துகுடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்க தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது.
தூத்துகுடியில் நடைபெற்று வரும் சம்பவம் குறித்து வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும் அதிகளவு பரவுவதால் பதட்டம் ஏற்படுவதாகவும், மேலும் போராட்டக்காரர்களின் ஒருங்கிணைப்புக்கு சமூக வலைத்தளங்கள் பெரும்பங்கு வகிப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் நிலைமை சீரானவுடன் இணையதள சேவை வழங்கப்படும் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.