விக்னேஷ் சிவன் அடுத்த படத்தில் 3 பிரபல இயக்குனர்கள்.. 'லியோவுடன் கனெக்சன்..!

  • IndiaGlitz, [Sunday,November 12 2023]

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அதை அடுத்து அவரது இயக்கத்தில் உருவாகும் படம் இன்னும் வெளியாகவில்லை. அஜித் நடிக்க இருக்கும் படத்தை அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த படம் டிராப் ஆகிவிட்டது.

இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மிஷ்கின் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

மொத்தத்தில் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் எஸ்ஜே சூர்யா, மிஸ்கின் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகிய மூன்று இயக்குனர்கள் இணைந்துள்ளனர்.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தை ’லியோ’ படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் லவ் மற்றும் மொபைல் போன் டெக்னாலஜி இணைந்த கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

ஜெயில்ல இருந்து வெளியில போறதை விட தப்புல இருந்து வெளியே போகணும்: 'சைரன்' டீசர்..

ஜெயம் ரவி நடித்த 'சைரன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

தீபாவளி வாழ்த்து சொன்ன கமல்.. அங்கேயும் விடாமல் துரத்தும் பிரதீப் பிரச்சனை..!

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ரெபல்' படத்தின் டீசர் வெளியீடு

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின்

ரெட் கார்டுக்கு பஞ்சமே இல்லை.. நிறைய இருக்கும்.. விசித்ராவுக்கு வேற லெவல் பதில் கொடுத்த கமல்ஹாசன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பை அநியாயமாக விரட்டிய மாயா, பூர்ணிமா கும்பலுக்கு இன்று கமல்ஹாசன் சரியாக பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்ததை விட அதிகமாக

என்னை பத்தி பேச யாருக்கும் ரைட்ஸ் இல்லை: மாயா கேங்கிற்கு வார்னிங் கொடுத்த ரட்சிதா..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான மாயா, தினேஷை வீழ்த்துவதற்காக ரட்சிதா குறித்து பேச வேண்டும் என்று பூர்ணிமாவுக்கு ஆலோசனை கூறிய நிலையில் இது குறித்து ரட்சிதா தனது சமூக