சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற உதவி இயக்குனர் விபத்தில் பலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரண்டு பேருக்கு மேல் கூடக்கூடாது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் 144 தடை உத்தரவு ஆரம்பிப்பதற்கு முன்னரே சொந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறினர். ஏற்கனவே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல இருந்த ஒரே வழி பேருந்து மட்டும்தான். எனவே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடினர். ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் தள்ளி நிற்க வேண்டும் என்ற அரசின் அறிவுறுத்தல் காற்றில் பறக்கவிடப்பட்டு சொந்த ஊருக்கு பேருந்து செல்வதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடித்ததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் பேருந்து கிடைக்காததால் பைக்கிலேயே சொந்த ஊருக்கு செல்ல முயன்ற மூவர் பரிதாபமாக விபத்தில் பலியான சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒசூரிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு பைக்கில் இருவர் சென்ற நிலையில் அவர்கள் சென்ற பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே இருவரும் மரணம் அடைந்தனர். அதேபோல் சென்னையிலிருந்து மதுரைக்கு பைக்கில் சென்ற உதவி இயக்குனர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com