விஷ்ணுவோட அக்கா என்னை முறை முறைன்னு முறைக்கிறாங்க.. 3 போட்டியாளர்கள் புலம்பல்..!

  • IndiaGlitz, [Wednesday,December 20 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்ற நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்தோம். இன்றைய இரண்டாவது புரமோவில் விஷ்ணுவின் சகோதரி மற்றும் தாயார் வருகை தந்த நிலையில் பூர்ணிமா மற்றும் மாயாவிடம் விலகி இருக்க வேண்டும் என்றும் அவர்களிடம் அதிகமாக ஒட்ட வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

அது மட்டுமின்றி பூர்ணிமா கடந்த சில நாட்களாக விஷ்ணுவிடம் நெருக்கமாக பழகி வருவதும் விஷ்ணுவின் சகோதரிக்கு பிடிக்கவில்லை என அவர் பார்வையில் இருந்தே தெரிகிறது. அவர் பூர்ணிமாவை முறைத்து பார்த்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவில் விஷ்ணுவோட அக்கா என்ன முறைக்கிறாங்க என்று மாயாவும், ‘ஆமாம் என்னையும் முறைக்கிறாங்க’ என்று நிக்சனும் கூற, அப்போது அங்கு வரும் பூர்ணிமாவும் என்னையும் முறை முறைன்னு முறைக்கிறாங்க’ என்று கூறுகிறார்.

மொத்தத்தில் மாயா, பூர்ணிமா, நிக்சன் ஆகிய மூன்று பேருக்கும் விஷ்ணுவின் சகோதரி வரவு கிலியை கொடுத்துள்ளது என்பது தெரிய வருகிறது. இந்த நிலையில் நிக்சன் தனது அப்பா குறித்து கூறும்போது ’என் அப்பாவோட பேசி ஆறு மாசம் ஆச்சு, என் நம்பரை கூட பிளாக் பண்ணி வச்சுட்டாரு’ என்று கூறிய காட்சிகளும் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

விஷ்ணுவின் அக்கா, மாயா, பூர்ணிமா குறித்து எச்சரிக்கை செய்ததை அடுத்து விஷ்ணுவின் நடவடிக்கையில் என்ன மாற்றம் இருக்கும் என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்ப்போம்,.

More News

'தங்கலான்' புதிய ரிலீஸ் தேதி இதுவா? 3 நாட்கள் தொடர் விடுமுறையால் குஷி..!

விக்ரம் நடித்த  'தங்கலான்' திரைப்படம் ஜனவரி இறுதியில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் செய்து தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இவங்க மொறைக்கிறாங்க.. என்னை அடிப்பாங்கன்னு நினைக்கிறேன்: விஷ்ணு உறவினர் குறித்து பூர்ணிமா

நான் விஷ்ணுவிடம் சரியாக பேசியதே இல்லை என்று பூர்ணிமா கூற அதற்கு விஷ்ணுவின் உறவினர் முறைக்க 'இவங்க என்ன அடிப்பார்கள் என்று நினைக்கிறேன்,

கார்த்திக் நரேன் அடுத்த படத்தின் சென்சார் தகவல். .ரிலீஸ் எப்போது?

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

'தளபதி 68' டைட்டில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி.. என்ன சொல்லியிருக்கிறார்?

 தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.

16 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் மீண்டும் இணையும் காமெடி நடிகர்? 'தளபதி 68' புதிய அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் 16 வருடங்கள் கழித்து விஜய்யுடன் இணைந்துள்ள காமெடி நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது