கார் திருடுவது எப்படி? யூடியூபில் கற்று கொள்ளையடித்த மூவர் கைது!
- IndiaGlitz, [Thursday,October 03 2019]
யூடியூப் இணையதளம் என்பது இந்த நூற்றாண்டு இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. எந்த ஒரு தகவல் தேவை என்றாலும் யூட்யூபில் கிடைக்கும் என்பதால் பல்வேறு விஷயங்களை ஆசிரியர்கள் இல்லாமல் யூடியூப் மூலமே இளைஞர்கள் கற்று வருகின்றனர். இளைஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும், பொழுதுபோக்கிற்கும் யூடியூப் பயன்பட்டு வருகிறது
ஆனால் இந்த தொழில்நுட்பத்தை ஒரு சிலர் திருடுவதற்கு பயன்படுத்துவது பெரும் வருத்தத்தை அளிக்கிறது. மங்களூரை உள்ள ஒரு கும்பல் கார் திருடுவது எப்படி? என்பதை யூடியூப் மூலம் கற்றுக்கொண்டு அதன்மூலம் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த அலி அகமதுவும், அவரது நண்பர்களும் சேர்ந்து மங்களூரை மூலம் கார் கதவுகளை கள்ளத்தனமாக திறப்பது எப்படி என்பதை மங்களூரை மூலம் கற்றுக் கொண்டுள்ளனர்
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெங்களூர் பெங்களூரில் பல கார்களை இந்த கும்பல் திருடி மங்களூருக்கு ஓட்டிச் சென்று அங்கு போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தனது காரை காணவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது, இந்த கொள்ளையர்கள் சிசிடிவி வீடியோவால் பிடிபட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் காரின் கதவை சிப் மூலம் திறப்பது எப்படி என்பதை யூடியூப் மூலம் கற்றுக்கொண்டதாக தெரிவித்தனர் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தாமல் அழிவுக்கு பயன்படுத்தினால் இறுதியில் துன்பம்தான் நேரும் என்பதற்கு இந்த கும்பல் ஒரு உதாரணமாக உள்ளது