விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 3 வேட்பாளர்கள் வெற்றி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஒரு சிலர் வெற்றி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர் முகமது பர்வேஸ் வெற்றிபெற்றார் என்பதை பார்த்தோம், தற்போது மேலும் இரண்டு விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை நகராட்சியில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பூக்கடை மோகன் வெற்றி பெற்றார். அதேபோல் விருதுநகர் மாவட்டம் தென் கொடிக்குளம் பேரூராட்சி 5வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் ராஜசேகரன் வெற்றி பெற்றார்.
சென்னை மாநகராட்சி 136 வார்டில் போட்டியிட்ட 22 வயது இளம் பெண் திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி. அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் அறிவுச்செல்வி ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்தாலும் நூலிழையில் தோல்வி அடைந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout