லாலுபிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை: சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,January 06 2018]

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வெளியான நிலையில் சற்றுமுன் அவருடைய தண்டனை குறித்த விபரங்களை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதன்படி லாலுபிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய லாலு பிரசாத் யாதவ் மகனும், பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், 'இந்த வழக்கே அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தான். இருப்பினும் நீதிமன்றம் அதன் கடமையை செய்துள்ளது. எங்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள் அடங்கிய நகல் கிடைத்தவுடன் நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்' என்று கூறியுள்ளார்.